நடிகர் விஜய் அரசியலில் குதித்து புதிதாக கட்சியையம் தொடங்கிவிட்டார். முழு நேர அரசியல்வாதியாக மாறிஅனைத்து விஷயங்கள் பற்றியும் அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் அவர்.
விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் நடிகர் அஜித் அரசியல் பற்றி தன்னுடன் சொன்ன விஷயத்தை நடிகர் ரமேஷ் கண்ணா பகிர்ந்து இருக்கிறார்.
ரமேஷ் கண்ணா பேட்டி
இயக்குனரும் காமெடி நடிகருமான ரமேஷ் கண்ணா அஜித் மற்றும் விஜய் உடன் ஏராளமான படங்களில் இதற்கு முன் பணியாற்றி இருக்கிறார்.
“விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு, நீங்க எப்போ?” என நான் கேட்டேன், அதற்கு அவர் ‘மூடிட்டு போ’ என சொல்லிவிட்டார்.
“அந்த அளவுக்கு தான் அஜித்துக்கு அரசியல் மீது ஆர்வம் இருக்கிறது. அவரை பொறுத்தவரை அரசியல் என்றால் வாக்களிக்கும் கடமையை செய்ய வேண்டும், அவ்வளவு தான்” என ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.