Monday, February 17, 2025
Homeசினிமாவிஜய் இதை செய்ய ஆசை கொண்டோம்.. ரகசியத்தை போட்டுடைத்த விஜய்யின் அம்மா ஷோபா

விஜய் இதை செய்ய ஆசை கொண்டோம்.. ரகசியத்தை போட்டுடைத்த விஜய்யின் அம்மா ஷோபா


விஜய்

தமிழ் சினிமாவில் தற்போது புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். அவரது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அரசியல், நடிப்பு என்று மிகவும் பிஸியாக வலம் வரும் விஜய் சமீபத்தில் அவருடைய தவெக கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்தார்.

அம்மா ஷோபா

இந்நிலையில், விஜய்யின் அம்மாவான ஷோபா சந்திரசேகர் விஜய்யின் இந்த வளர்ச்சி குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ” சிறு வயது முதல் விஜய் அவர் என்ன நினைக்கிறாரோ அதை கண்டிப்பாக செய்து முடிப்பார். பிடித்ததை அடைய என்ன தடைகள் வந்தாலும் சரி அதை பற்றி கவலை கொள்ள மாட்டார்.

விஜய் இதை செய்ய ஆசை கொண்டோம்.. ரகசியத்தை போட்டுடைத்த விஜய்யின் அம்மா ஷோபா | Vijay Mother Share Details About Him

அது தான் அவரது குணம். நானும் என் கணவரும் விஜய்யின் சிறு வயது முதல் அவரை டாக்டராக பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டோம்.

ஆனால் விஜய் ஆக்டர் ஆக்டர் என்று கூறி நடிக்க வந்து விட்டார். தற்போது, அவர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளார்.

அதற்கு என் வாழ்த்துக்கள்” என்று ஷோபா அவருடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தெரிவித்துள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments