Saturday, March 15, 2025
Homeசினிமாவிஜய் செய்த அந்த விஷயம்.. இளம் நடிகை மோனிஷா பிளெஸி உடைத்த ரகசியம்

விஜய் செய்த அந்த விஷயம்.. இளம் நடிகை மோனிஷா பிளெஸி உடைத்த ரகசியம்


விஜய்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கிறார். அதனால் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மோனிஷா பிளெஸியும் இப்படத்தில் நடிக்கிறார்.

உடைத்த ரகசியம் 

இந்நிலையில், நடிகர் விஜய் குறித்தும் ஜனநாயகன் படம் குறித்தும் சில சுவாரசியமான விஷயங்களை மோனிஷா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், “ஜனநாயகன் படத்தின் பூஜைக்கு என்னை அழைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதிலும், நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன்.

முதல் வரிசையில் இருந்த அனைவருக்கும் விஜய் வணக்கம் வைத்து சென்றார். நான் கடைசியில் அமர்ந்ததால் அப்படியே சென்று விடுவார் என்று நினைத்தேன்.

விஜய் செய்த அந்த விஷயம்.. இளம் நடிகை மோனிஷா பிளெஸி உடைத்த ரகசியம் | Actress About Vijay At Movie Set

ஆனால், அவர் கடைசி ரோ வரை வந்து கைகொடுத்து வரவேற்றதை கண்டு ஷாக் ஆகிவிட்டேன். அவர் படத்தில் நடிப்பது என்பது பெரிய விஷயம் அதிலும் விஜய் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டது அவருடைய குணத்தை குறிப்பிடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.     

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments