நடிகை விசித்ரா
சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் விசித்ரா. இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 7 -ல் போட்டியாளராக பங்கேற்று மிகவும் போல்டாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீசன் 7 தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார். இதுகுறித்து அடுத்தடுத்த ப்ரோமோஷன் வீடியோக்கள் வெளியாகும் நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது, இதுகுறித்து நடிகை விசித்ரா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8
அதில்,விஜய் சேதுபதி ஒரு சிறந்த தொகுப்பாளராக பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் நடந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கிறேன். முன்பு தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல்ஹாசன் செட்டிற்குள் வந்தால் அனைவரும் பயப்படுவார்கள். அதுபோல ஒரு தோற்றத்தை விஜய் சேதுபதியும் கொடுக்க வேண்டும். மற்றும் அவர் தன்னுடைய மென்டல் ஹெல்த்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விசித்ராவின் விருப்பம்
மேலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், தற்போது அவரது நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியது போலவே மிகச்சிறப்பாக விஜய் சேதுபதியும் நடத்துவார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.