சக்திவேல்
சக்திவேல், விஜய் தொலைக்காட்சியில் இளம் கலைஞர்கள் நடிக்க மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்.
பிரவீன் ஆதித்யா மற்றும் அஞ்சலி பாஸ்கர் ஜோடியாக நடிக்கும் இந்த தொடரில் மெர்வென் பாலாஜி, ரேஷ்மா பிரசாத் ஆகியோரும் முக்கிய ஜோடியாக நடிக்கிறார்கள்.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மாற்றம்
அடுத்தடுத்து சுவாரஸ்யமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இப்போது ஒரு நடிகை மாற்றம் நடந்துள்ளது.
அதாவது சக்தியின் தங்கையாக நடித்துவந்த மஹிமா செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தற்போது அவர் விலக இனி செல்வி கதாபாத்திரத்தில் லைலா என்பவர் நடிக்க உள்ளாராம்.