அனிதா சம்பத்
அனிதா சம்பத், சன் தொலைக்காட்சியில் அழகான தூய தமிழில் செய்திகள் வாசித்து மக்களை கவர்ந்தவர்.
செய்தி வாசிப்பாளராகவே சில படங்களில் தோன்றிய இவர் அந்த வேலையை விட்டுவிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
அந்நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தவர் இப்போது தனது பயணத்தில் மாஸ் காட்டி வருகிறார்.
தொகுப்பாளராக விஜய் டிவியில் கலக்கி வருகிறார், இதுதவிர சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து நிறைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
புதிய என்ட்ரி
தற்போது அனிதா சம்பத் சீரியல்களில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தான் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.
ஆனால் என்ன கதாபாத்திரம், எப்போது என்ட்ரி கொடுக்கிறார் என்பது தெரியவில்லை.