நீ நான் காதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் சீரியல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
ஹிந்தியில் வெற்றியடைந்த Iss Pyaar Ko Kya Naam Doon? என்ற சீரியலின் ரீமேக்காக நீ நான் காதல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 350 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. பிரேம் ஜேகப், வர்ஷினி சுரேஷ், சாய் காயத்ரி, ஷங்கரேஷ் என பலர் நடித்து வருகின்றனர்.
நியூ என்ட்ரி
இந்த நிலையில் நீ நான் காதல் தொடரில் நடிகர் ஒருவர் புதிய என்ட்ரி கொடுக்க உள்ளார்.
பனிவிழும் மலர்வனம் தொடரில் நடித்துவரும் தேஜக், நீ நான் காதல் தொடரில் விமல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.