Wednesday, January 22, 2025
Homeசினிமாவிஜய் டிவியின் பனிவிழும் மலர்வனம் புதிய தொடரின் ஆரம்பம் எப்போது?... வெளிவந்த அறிவிப்பு

விஜய் டிவியின் பனிவிழும் மலர்வனம் புதிய தொடரின் ஆரம்பம் எப்போது?… வெளிவந்த அறிவிப்பு


விஜய் டிவி

சன் டிவியோ, விஜய் டிவியோ ஒரு தொடரை முடித்தால் உடனே புதிய தொடரை களமிறக்கிவிடுவார்கள்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் அண்மையில் மோதலும் காதலும் தொடர் முடிவுக்கு வந்தது, நன்றாக ஓடிய தொடரை ஏன் முடித்தீர்கள் என ரசிகர்கள் பல கேள்விகள் எழுப்பி வந்தார்கள்.

ஆனால் என்ன செய்ய முடியும் தொடர் முடிவடைந்தது, அடுத்த தொடரும் ஆரம்பமாக இருக்கிறது.


புதிய தொடர்

கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியில் பனிவிழும் மலர்வனம் என்ற தொடரின் புரொமோ ஒளிபரப்பாகி வந்தது. இதில் விஜய்யில் ஒளிபரப்பான ஒவ்வொரு தொடர்களின் பிரபலங்களும் இணைந்துள்ளார்கள்.

பிக்பாஸ், பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வினுஷா, தமிழும் சரஸ்வதியும் புகழ் நடிகர், ஈரமான ரோஜாவே 2, மௌன ராகம் 2 பிரபலங்கள் என பலர் இதில் உள்ளார்கள்.

தற்போது இந்த தொடர் வரும் ஜுன் 24ம் தேதி முதல் திங்கள்-வெள்ளி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments