நீ நான் காதல்
விஜய் டிவியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது, அதில் ஒன்று தான் நீ நான் காதல். கடந்த நவம்பர் 2023ம் ஆண்டு நிறைய புதுமுகங்கள் நடிக்க தொடங்கப்பட்டது.
இதுவரை 200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இருக்கிறது.
கியூட்டான நபர்களின் காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடர் Iss Pyaar Ko Kya Naam Doon என்ற ஹிந்தி தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகி மாற்றம்
ராகவ்-அபிநயா, ஆகாஷ்-அனு இந்த ஜோடிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு தான் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் சாய் காயத்ரி.
தற்போது இவர் நீ நான் காதல் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார். அவருக்கு பதில் நடிகை அக்ஷிதா இனி அனுவாக நடிக்க இருக்கிறாராம்.