மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது வேலையை தொடங்கி இப்போது முன்னணி தொகுப்பாளினியாக வளர்ந்து நிற்பவர் மணிமேகலை.
இசை தொலைக்காட்சியை தொடர்ந்து திருமணம் ஆக அதன்பிறகு விஜய் டிவி பக்கம் வந்தார். இந்த தொலைக்காடசியில் நிறைய ஷோக்களை தொகுத்து வழங்கியும், போட்டியாளராகவும் கலந்துகொண்டிருக்கிறார்.
கடைசியாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் சில காரணங்களால் வெளியேறிவிட்டார்.
அடுத்த டார்கெட்
விஜய் டிவியில் இருந்தாலும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி தயாரிப்பு குழுவுடன் மட்டும் இனி பணிபுரிய மாட்டேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தொகுப்பாளினி மணிமேகலை பிக்பாஸ் 8வது சீசனில் வரப்போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்னொரு செய்தி வலம் வருகிறது.
அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் மணிமேகலைக்கு பிரச்சனை ஏற்பட அவர் ஜீ தமிழ் செல்கிறார் என்கின்றனர்.