மைனா நந்தினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நந்தினி.
இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தற்போது அவர், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு இவருக்கு பிளஸ் பாயிண்டாக அடுத்தடுத்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பதிலளித்த நந்தினி
இந்த நிலையில் இவரிடம் சமீபத்தில் நடந்த பேட்டியில் நீங்கள் ஏன் முன்பு மாதிரி டிவி நிகழ்ச்சிகளில் வருவதில்லை? உங்களை யாரும் நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடவில்லையா? அல்லது அங்கு ஏதேனும் பிரச்சனையா? என்று கேட்டதற்ககு,
” அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க, ஆரம்பத்தில் டிவி சேனல்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். இப்போது அது மூலமாக எனக்கு பல பெரிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
என்னுடைய கனவை நோக்கி தான் நான் பயணிக்க முடியும் எனவும், அதனால்தான் நான் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறேன். எனக்கு யாரோடும் கருத்து வேறுபாடு கிடையாது” என கூறியுள்ளார்.
மேலும், “நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடுகிறார்கள், ஆனால் என்னால் இப்போது அங்கு முன்பு போல போக முடியவில்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மற்றும் வெப் சீரிஸில் என்னுடைய கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.