விஜய் டிவி
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான விஜய் டிவி
பற்றிய ஒரு விஷயம் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது மக்கள் கொண்டாட தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் இப்போது பிரச்சனை வெடித்துள்ளது.
5வது சீசனில் தொகுப்பாளினியாக கலக்கிய மணிமேகலை, தன்னை அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஒரு தொகுப்பாளினி தனது வேலையை செய்யவிடவில்லை என கூறி வீடியோ வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.
அந்த விஷயம் தான் இப்போது விஜய் டிவி பிரபலங்கள் இடையே அதிகம் பேசப்படுகிறது.
சம்பள விவரம்
இந்த நிலையில் விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பள விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக பல ஆண்டுகளாக நீயா நானா ஷோவில் கலக்கும் கோபிநாத்திற்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 5 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மாகாபா ஆனந்திற்கு ஒரு எபிசோடுக்கு இரண்டரை லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். ரக்ஷனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 1 லட்சமும், மணிமேகலைக்கு ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் என்கின்றனர்.
விஜய் டிவியில் பெண் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக செயல்படும் பிரியங்காவிற்கு ஒரு எபிசோடிற்கு இரண்டரை லட்சம் வரை சம்பளம் என்கின்றனர்.