கம்பெனி
சன் மற்றும் விஜய் டிவிகள் தான் தமிழ் சினிமாவில் டாப் தொலைக்காட்சிகளாக உள்ளன.
இந்த 2 தொலைக்காட்சியிலும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என நிறைய ரசிகர்களின் வரவேற்பு பெற்றுள்ளது.
புதிய நிகழ்ச்சி
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் சமீபத்தில் கம்பெனி என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
வழக்கம் போல இந்த ஷோவையும் மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்குகிறார்.
இப்போது இன்னொரு தொலைக்காட்சியான சன் டிவியில் புதிய ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டுள்ளது.
நாங்க ரெடி நீங்க ரெடியா என்ற இந்த நிகழ்ச்சியை விஜே நிக்கி மற்றும் பவித்ரா இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள். அதோடு இந்த ஷோவின் 2 நடுவர்களில் ஒருவராக நடிகை கனிஹா இருக்கிறார். விரைவில் இந்த ரியாலிட்டி ஷோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.