விஜய் டிவி
விஜய் டிவி, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு தொலைக்காட்சி.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன இந்த தொலைக்காட்சியில் அடுத்தடுத்து நிறைய வெற்றிகரமான தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி என பல தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
புதிய தொடர்
தற்போது கண்மணி அன்புடன் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது, தொடரின் ஃபஸ்ட் லுக் வெளியாகி பின் 1, 2, 3 புரொமோக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Tele Factory தயாரிக்கும் இந்த புதிய தொடரை Kathiravan Francis தான் இயக்க இருக்கிறாராம்.
படப்பிடிப்பின் முதல்நாள் காட்சியின் படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாக என்ன சீரியலாக இருக்கும், தொடர் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.