சமையல் நிகழ்ச்சி
தமிழ் சின்னத்திரை தான் இப்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
இதனால் எல்லா தொலைக்காட்சியிலும் மாற்றி மாற்றி புத்தம் புதிய தொடர்கள், சுவாரஸ்யமான ரியாலிட்டி ஷோக்கள் என நிறைய வருகின்றன.
ஏற்கெனவே விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற புதுமையான சமையல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றது.
அதைத்தொடர்ந்து சன் டிவியில் டாப் குக் டூப் குக் அறிமுகம் செய்யப்பட்டு அதுவும் ஹிட்டாக ஓளிபரப்பாகி வருகிறது.
புதிய ஷோ
இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் புத்தம்புதிய சமையல் நிகழ்ச்சி வரப்போகிறது. சமையல் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் புரொமோவில் நடிகை சீதா தோன்றி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜீ தமிழின் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் Krishna Mckenzie கலந்துகொள்ள இருக்கிறாராம். அவர் இடம்பெறும் புரொமோ வீடியோ வெளியாக ரசிகர்கள் நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.