நடிகை கே.ஆர்.விஜயா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக ஒருகாலத்தில் இருந்தவர். எம்ஜிஆர், சிவாஜி உட்பட ஏராளமான நடிகர்கள் உடன் அவர் நடித்து இருக்கிறார்.
மேலும் பல டிவி சீரியல்களிலும் கேஆர் விஜயா நடித்து இருக்கிறார். அதிலும் அவர் பல பக்தி படங்கள் மற்றும் தொடர்களில் நடித்திருப்பதை பார்த்திருக்கிறோம்.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் முக்கிய சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் கே.ஆர்.விஜயா தற்போது கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
அவர் சிறகடிக்க ஆசை குழு உடன் இருக்கும் போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.