Sunday, February 9, 2025
Homeசினிமாவிஜய் தவறான ரூட்டில் செல்கிறார்.. பிரபல இயக்குனர் தாக்கு

விஜய் தவறான ரூட்டில் செல்கிறார்.. பிரபல இயக்குனர் தாக்கு


நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப்போகும் அவரது 69வது படம் தான் கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல்வாதிகள் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

மோகன் ஜி


சமீபத்தில் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். திமுக செய்வது போல தான் விஜய்யும் செய்கிறார் என பலரும் அவரை தாக்கி வருகின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசுரன் போன்ற படங்களை இயக்கி இருந்த இயக்குனர் மோகன்.ஜி தற்போது விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.

“தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிகம் பிடித்தவர் தலைவராக வருவது நல்லது தான். ஆனால் அவரும் தவறான ரூட்டில் செல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல், ஓணத்திற்கு சொன்னது வருத்தமாக இருக்கிறது” என அவர் கூறி இருக்கிறார். 

விஜய் தவறான ரூட்டில் செல்கிறார்.. பிரபல இயக்குனர் தாக்கு | Vijay Going In Wrong Route Director Mohan G

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments