தனுஷ்
நடிகர் தனுஷ், கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். ஒரு பக்கம் இயக்குனர், இன்னொரு பக்கம் நடிப்பு என இரண்டிலும் மாஸ் காட்டி வருகிறார்.
அண்மையில் இவர் இயக்கி நடித்திருந்த ராயன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது.
தற்போது தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து பல சென்சேஷனல் இயக்குனர்களுடன் கூட்டணியையும் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனுஷ் மார்வெல் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக இணையத்தில் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அனேகன். இப்படத்தில் முதன் முதலில் நடிகர் விஜய் தான் நடிக்கவிருந்தாராம்.
ஆனால் அந்த நேரத்தில் ஜில்லா மற்றும் கத்தி ஆகிய படங்களை விஜய் கைவசம் வைத்திருந்தார். கால் சீட் காரணமாக அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். இந்த விஷயத்தை கே.வி. ஆனந்த் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.