தளபதி 69
சினிமா ரசிகர்கள் குறிப்பாக தென்னிந்திய ரசிகர்களுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவென்றால் அது தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகப்போகிறார் என்பது தான்.
அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்து வசூல் ரீதியாக மாஸ் காட்டி வரும் படம் GOAT. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அவர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறிய நிலையில், தற்போது இந்த படத்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
அதாவது, விஜய் நடிக்கப்போகும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கப்போவதாகவும், இந்த படத்தில் நடிக்க நடிகை மமிதா பைஜு கமிட்டாகியுள்ளார் எனவும் ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தனர்.
மேலும், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் அனைவருக்கும் இந்த படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.