மமிதா பைஜூ
மலையாளத்தில் ப்ரேமலு படத்தின் மூலம் சென்சேஷனல் நடிகையான மாறியுள்ளார் மமிதா பைஜூ. இதன்பின் இவர் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
மேலும் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அதர்வா நடிப்பில் உருவாகவுள்ள படத்திலும் மமிதா பைஜூவை ஹீரோயினாக கமிட் செய்துள்ளனர்.
படக்குழுவிற்கு நடிகை கொடுத்த அதிர்ச்சி
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருந்ததால், அதற்கான விசா வேலைகள் நடந்து வந்துள்ளது. விசா உறுதிசெய்யப்பட்டவுடன் படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்லவிருந்த நிலையில், மமிதா பைஜூவை படக்குழுவால் தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்டது.
இறுதியில் ஒரு வழியாக மமிதா பைஜூவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம் மமிதா பைஜூ. இதற்கு காரணம் அவர் வேறொரு பெரிய படத்தில் கமிட் ஆனது தான் என கூறப்படுகிறது.
அந்த பெரிய படம் விஜய்யின் தளபதி 69 திரைப்படம் தான் என்கின்றனர். விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் தளபதி 69ல் விஜய்யின் மகள் கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடிக்கிறாராம். இந்த தகவல் சமீபத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி 69ல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால், ஏற்கனவே கமிட் செய்து வைத்திருந்த படத்தில் நடிக்க மாட்டேன் என மமிதா பைஜூ கூறிவிட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.