தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வசூலில் சாதனை படைக்கும் நடிகராக விளங்கி வருகிறார் விஜய்.
இவரை வைத்து ஒரு படமாவது தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.
ஆசைப்பட்ட நடிகை சிம்ரன்
அந்த வகையில் நடிகர் விஜய்யின் படத்தை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசையோடு நடிகை சிம்ரன், விஜய்யிடம் கேட்டுள்ளாராம். சமீபத்தில் இதற்கான பேச்சு வார்த்தை நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி எடுத்த முடிவு
விஜய்யின் கடைசி படமாவது தனக்கு கிடைக்கும் என எண்ணி சிம்ரன் கேட்டுள்ளாராம். ஆனால், விஜய் என் படத்தை தயாரித்தால் கண்டிப்பாக பல பிரச்சனைகள் வரும், அதை உங்களால் சமாளிக்க முடியாத என சிம்ரனிடம் கூறி வழியனுப்பி வைத்துள்ளார் விஜய்.
இந்த தகவலை பிரபல மூத்த பத்திகையாளர் பிஸ்மி பகிர்ந்துள்ளார். மேலும் விஜய்யின் கடைசி படத்தை KVN Productions தான் தயாரிக்கவுள்ளார்களாம். ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.