நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் அதை தயாரித்து வருகிறது.
மேலும் கமல் உடன் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சிம்பு.
அடுத்த படம்
இந்நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஓ மை கடவுளே பட புகழ் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்து நடிக்க போகிறாராம். ஏஜிஎஸ் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம்.
தற்போது அஸ்வத் மாரிமுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் டிராகன் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு அதே தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டணியில் சிம்புவை அவர் இயக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் GOAT படத்தை தயாரித்த ஏஜிஎஸ் அடுத்து மற்ற ஹீரோக்களின் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.