விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். இன்று அவர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்து இருந்தார்.
தீ காயம்
இந்நிலையில் விஜய் பிறந்த நாள் முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் நீலாங்கரையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது சாகசம் செய்ய முயன்ற சிறுவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.