Wednesday, October 9, 2024
Homeசினிமாவிஜய் போல AI பயன்படுத்தி இளமையாக மாறிய ஜாக்கி சான்..

விஜய் போல AI பயன்படுத்தி இளமையாக மாறிய ஜாக்கி சான்..


நடிகர் ஜாக்கி சான்

குழந்தை நட்சத்திரமாக ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி பிறகு, ஸ்டன்ட் மேனாக புரூஸ் லீ படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமானவர் ஜாக்கி சான்.

தனக்குத் தெரிந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை காமெடியான ஸ்டைலில் தன் படங்களில் நடித்து அதன் மூலம் பல கோடி ரசிகர்களை சம்பாதித்தவர்.

ஜாக்கிசான் சாகசங்கள் என்ற கார்ட்டூன் மூலம் குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோவாகவே ஜாக்கி சான் மாறினார்.

இரண்டு வேடங்களில் ஜாக்கி சான் 

இவர் நடித்த ‘குங்ஃபூ யோகா’ படத்தின் தொடர்ச்சியாக ஸ்டான்லி டாங் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘எ லெஜண்ட்’ படத்தில் ஜாக்கி அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் இளம் வீரர் என இரண்டு மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் போல AI பயன்படுத்தி இளமையாக மாறிய ஜாக்கி சான்.. | Jackie Chan Next Movie Project

இதில், ஜாக்கி நடிக்கும் இளம் வீரர் கதாபாத்திரத்தை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளனர்.

இந்த படத்தில் ஜாக்கியுடன் லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments