ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய்யின் மூத்த மகன் தான் ஜேசன் சஞ்சய். இவர் தனது தாத்தா மற்றும் தந்தையை போலவே சினிமாவில் என்ட்ரி கொடுத்துவிட்டார்.
ஆனால், ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்கவுள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காக வேலைகள் தான் தற்போது நடைபெற்று வருகிறதாம்.
இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது. மேலும் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சூரிக்கு கதை சொன்ன ஜேசன்
இந்த நிலையில், நடிகர் சூரியிடமும் கதை கூறியுள்ளாராம் சஞ்சய். ஆக்ஷன் திரில்லர் கதையை சஞ்சய் கூறியுள்ளார். ஆனால், சூரி இது தனக்கு சரியாக இருக்கு, இது மாஸ் ஹீரோக்களுக்கு தான் சரியாக இருக்கும் என கூறி, மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை 1 மற்றும் கருடன் படத்தின் மூலம் கதையின் நாயகனாக கொண்டாடப்பட்டு வரும் சூரி நடிப்பில் அடுத்ததாக கொட்டுக்காளி திரைப்படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.