Wednesday, November 6, 2024
Homeசினிமாவிஜய் முதலில் சினிமா துறைக்கு என்ன செய்தார்.. விமர்சித்தவருக்க ஷோபி மாஸ்டரின் பதில்

விஜய் முதலில் சினிமா துறைக்கு என்ன செய்தார்.. விமர்சித்தவருக்க ஷோபி மாஸ்டரின் பதில்


நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி தற்போது மாநாட்டை நடத்தி தனது கொள்கைகள் என்ன, எதிரிகள் யார் என அனைத்தையும் அறிவித்து விட்டார்.

தற்போது அவர் சினிமாவில் உச்ச நடிகராக ஒரு படத்திற்கு 200 கோடி ருபாய் சம்பளம் பெறும் நிலையில் இருப்பதை உதறிவிட்டு தற்போது வந்திருப்பதாக கூறி இருக்கிறார்.

இந்நிலையில் விஜய் மீது பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. விஜய் பல வருடமாக சினிமா துறையில் இருக்கும் நிலையில், அந்த துறைக்காக என்ன அப்படி செய்துவிட்டார் என சிலர் விமர்சித்து இருக்கின்றனர்.

ஷோபி மாஸ்டர் பதில்

இந்நிலையில் விஜய் நடிகர் சங்கத்திற்கு என்ன செய்தார், மற்ற கலைஞர்கள் சங்கத்திற்கு என்ன செய்துவிட்டார் என ஒருவர் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.


“என்னுடைய இப்பதிவை அரசியல் பதிவாக காண வேண்டாம் தற்செயலாக இப்பதிவை கண்டேன் இதற்கு பதிலளிக்க நான் கடமைபட்டுள்ளேன். நடன சங்கத்திற்கு நான் தலைவராக இருந்த காலகட்டத்தில், விஜய் சார் செய்த பண உதவியினால்தான் குறிப்பிட்ட அவ்வருடம் எம்சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவகாப்பீடு அளிக்க நேர்ந்தது. அதனால் அவ்வருடம் பல உறுப்பினர்கள், வயதான உறுப்பினர்கள் மருத்துவ பயன் பெற்றனர்.”

“இதை சொல்லாமல் நான் அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. நன்றி மறப்பது நன்றன்று” என அவர் கூறி இருக்கிறார். 

விஜய் முதலில் சினிமா துறைக்கு என்ன செய்தார்.. விமர்சித்தவருக்க ஷோபி மாஸ்டரின் பதில் | Shobi Master Reply To Troll On Vijay



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments