கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ரிவால்வர் ரீட்டா.
இப்படத்தின் டீசர் நேற்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளிவந்தது. இப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து சிறிதளவில் தெரிவித்திருந்தனர்.
விஜய் ஸ்டைலில் மாஸ் காட்டிய கீர்த்தி
இந்த நிலையில், வெளிவந்த இந்த டீசரில் கீர்த்தி சுரேஷ் தன்னிடம் இருந்து Handbag-ஐ பறித்துவிட்டு சென்ற ரவுடியை, தேடி செல்லும் இடத்தில் Shutter-ஐ திறக்க ரவுடியை அடித்து மாஸாக ஓபன் செய்கிறார்.
போக்கிரி படத்தில் இதே போல் தான் முதல் சண்டை காட்சியில் விஜய் ரவுடிகளை அடித்துவிட்டு, Shutter-ஐ ஓபன் செய்து மாஸாக பாடலுக்கு என்ட்ரி கொடுப்பார். விஜய்யின் இந்த மாஸ் சீனை கீர்த்தி சுரேஷ் தனது ஸ்டைலில் சூப்பராக செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்..