நடிகர் அஜித்
நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவரது படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள்.
கடைசியாக அஜித்தின் துணிவு படம் வெளியாகி இருந்தது, அதன்பின் அஜித் விக்னேஷ் சிவன் கதையில் நடிப்பதாக இருக்க பின் அந்த படம் கைவிடப்பட்டது.
பிறகு அஜித், மகிழ்திருமேனி கதையை தேர்வு செய்து விடாமுயற்சி என்ற படத்தில் நடித்தார்.
இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வந்தார். இந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும், அதை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
அடுத்தடுத்த படங்கள்
இந்த நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
கங்குவா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிறுத்தை சிவா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து 5வது முறையாக அஜித்துடன் இணைய உள்ளதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
அதேபோல் கேஜிஎஃப் மற்றும் சலார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல்-அஜித் கூட்டணி இணைய இருப்பதாகவும் சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.