விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் தான் அங்கு நிறைவு பெற்றது.
இதை தொடர்ந்து ஹைதராபாத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. விடாமுயற்சி படத்திலிருந்து அஜித்தின் First லுக் மற்றும் second லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு மத்தியில் வைரலானது.
வில்லன் அர்ஜுன்
இதை தொடர்ந்து கடந்த வாரம் திரிஷாவின் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்து வரும் நடிகர் அர்ஜுனின் போஸ்டரை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த போஸ்டர்..
Meet the Action King @akarjunofficial 🤩 Presenting the 4th look of VIDAAMUYARCHI. 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra… pic.twitter.com/QUDtu6FcCx
— Lyca Productions (@LycaProductions) July 28, 2024