விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் மற்றும் Second லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கும் நடிகர் ஜீவா ரவி நடிக்கிறார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விடாமுயற்சி படத்தில் அஜித் இளமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது “விடாமுயற்சி படத்தில் கடந்த டிசம்பர் மாதம் நான் கமிட் ஆனேன். இயக்குனர் மகிழ் திருமேனி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய முதல் படம் தடையற தாக்க படத்தில் இருந்து நான் நடிக்கிறேன். விடாமுயற்சி படத்தில் நான் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் அஜித் இளமையான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். எனக்கு இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு இருக்கிறது. அனைத்து நடிகர், நடிகைகளுடனும் எனக்கு காட்சி இருக்கிறது. படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து அப்டேட் கொடுக்கிறேன்” என பேசியுள்ளார்.