Tuesday, March 18, 2025
Homeசினிமாவிடாமுயற்சி விபத்துக்கு பின் அஜித் என்ன செய்தார் தெரியுமா? நடிகை உடைத்த ரகசியம்

விடாமுயற்சி விபத்துக்கு பின் அஜித் என்ன செய்தார் தெரியுமா? நடிகை உடைத்த ரகசியம்


அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

துணிவு படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து அஜித்தின் படம் வெளிவருவதால், இப்படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 உடைத்த ரகசியம்  

இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள ரெஜினா அஜித்குமார் மற்றும் ஆரவ் சந்தித்த விபத்து குறித்து பகிர்ந்துள்ளார். அதில், “விபத்து நடைபெறும் போது நான் படப்பிடிப்புத் தளத்தில் இல்லை.

இணையத்தில் வைரலான வீடியோவை நான் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் பார்த்தேன். அஜித் மற்றும் ஆரவ் என இருவரும் கைகளில் கட்டுப்போட்டுக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார்கள்.

விடாமுயற்சி விபத்துக்கு பின் அஜித் என்ன செய்தார் தெரியுமா? நடிகை உடைத்த ரகசியம் | Ajith Acted After The Accident

முதலில் ஏன் என்று தெரியாமல் இருந்தேன் பின்பு வீடியோ பார்த்த பின் தான் எனக்கு தெரிய வந்தது. அஜித், அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் சிறிது கூட பயம் இல்லாதவர்களாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக அஜித் சார் பேய் போன்று வேலை செய்யக்கூடியவர்” என்று கூறியுள்ளார்.      

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments