Tuesday, February 18, 2025
Homeசினிமாவிடுதலை 2 இசை வெளியிட்டு விழாவில் கடுப்பான இயக்குனர் வெற்றிமாறன்.. காரணம் என்ன

விடுதலை 2 இசை வெளியிட்டு விழாவில் கடுப்பான இயக்குனர் வெற்றிமாறன்.. காரணம் என்ன


வெற்றிமாறனின் விடுதலை 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் விடுதலை. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கவுதம் மேனன், ராஜிவ் மேனன், பவானி, சேத்தன், தமிழ் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து வெற்றியடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர். நேற்று விடுதலை இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.

கடுப்பான வெற்றிமாறன்

இந்த இசை வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், தனது படத்தில் வேலைபார்த்தவர்கள் குறித்தும், படத்தின் அனுபவங்கள், இளையராஜாவுடன் பயணித்தது குறித்தும் பேசி வந்தார்.

விடுதலை 2 இசை வெளியிட்டு விழாவில் கடுப்பான இயக்குனர் வெற்றிமாறன்.. காரணம் என்ன | Vetrimaaran Angry In Viduthalai 2 Audio Launch

அப்போது தனது படக்குழுவினர்கள் குறித்து பேசினார். அந்த சமயத்தில் திடீரென ஒருவர் வந்த, வெற்றிமாறனிடம் அனைவரின் பெயரையும் கூறவேண்டும் என சொல்ல, ‘நான் தான் யார் பெயரையும் சொல்லலனு சொல்லிட்டேன்ல டா. டீம் நா எல்லாரும் தானாடா. நன்றி” என கூறிவிட்டு, தன்னுடைய பேச்சு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கோபத்துடன் சென்று அமர்ந்துவிட்டார் வெற்றிமாறன். இந்த விஷயம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments