சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, கலகலப்பின் உச்சமாக இந்த வாரத்தின் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
அதாவது ஸ்ருதி, விஜயாவிற்கு பயம் காட்ட செய்த விஷயம், மீனாவால் எதர்சையாக நடந்த விஷயம் என எல்லாம் கலாட்டாவாக நடந்தது.
இப்போது மீனா-ஸ்ருதியை பிரிக்க விஜயா-ரோஹினி சேர்ந்து ஒரு பிளான் போட்டார்கள், ஆனால் அதுவே அவருக்கு ஆப்பாக அமைந்துள்ளது.
விஜயாவை ஏமாற்ற முத்து, மீனா, ஸ்ருதி, ரவி சேர்ந்து நாடகம் ஆடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ரோஹினி தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை காண ஊருக்கு சென்றுவிட்டார்.
சிக்கிய ரோஹினி
மனோஜ், ரோஹினிக்கு போன் செய்து நீ எப்போது வருவே என கேட்கிறார், அதற்கு அவர் நான் வித்யாவை பார்க்க வந்துள்ளேன் என கூற அதே நேரத்தில் அவர் கடைக்கு வருகிறார்.
அதைப்பார்த்து மனோஜ், வித்யாவுடனா இருக்க என கேட்ட அதற்கு ஆமாம் என்று கூறிவிட்டு தனது தோழிக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறுகிறார்.
உடனே வித்யா, நான் உன் கடையில் தான் உள்ளேன், மனோஜ் என்னை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என கூறுகிறார்.
ஷாக் ஆன ரோஹினி இப்படி சிக்கியிருப்பதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.