தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது, பாலிவுட் சினிமாவில் அதிக சொத்து மதிப்பு வைத்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்து காணலாம்.
ஷாருக்கான் :
கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகருமான ஷாருகானின் நிகர மதிப்பு தற்போது, ரூ. 7,300 கோடியாக உயர்ந்து பாலிவுட் சினிமாவில் அதிக சொத்து வைத்துள்ள நடிகராக கருதப்படுகிறார்.
ஜூஹி சாவ்லா :
இந்தி சினிமா முன்னணி நடிகையான இவர் தனது சிறந்த நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். இவருடைய நிகர மதிப்பு ரூ.4,600 கோடி என கூறப்படுகிறது.
ஹ்ரித்திக் ரோஷன் :
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல ரசிகர்களால் விரும்பப்படும் நடிகராக வலம் வருபவர் ஹ்ரித்திக் ரோஷன். இவருடைய சொத்து மதிப்பு ரூ.2,000 கோடி என கூறப்படுகிறது.
அமிதாப் பச்சன் :
பல தலமுறையாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக உச்சத்தில் இருப்பவர் அமிதாப் பச்சன். இன்றும் தனது நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் இவருடைய நிகர மதிப்பு ரூ. 1,600 கோடி வரை உள்ளது.
கரண் ஜோஹர் :
பாலிவுட் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்ட கரண் ஜோஹரின் சொத்து மதிப்பு ரூ. 1,400 கோடி என கூறப்படுகிறது.
இது இணையத்தில் வெளியாகியுள்ள தகவல் மட்டுமே, இதுகுறித்து எந்த அதிகாரப்பூரவமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.