கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகி வரும் திரைப்படம் தக் லைஃப்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டு வந்தது, தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனை தொடர்ந்து சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டிஜிட்டல் ரைட்ஸ்
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் தற்போது ரூ. 149.7 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புக்கு முன்னதாகவே படத்தின் ரைட்ஸ் மிகப்பெரிய அளவில் விலை போனது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.