நடிகை கீர்த்தி
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் டாப் நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பலவேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவில் இவரது நடிப்பில் ரகு தாத்தா படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான புரொமோஷனிலும் படு பிஸியாக கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது அவர் 69வது பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சிக்கு லட்சணமாக உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் கிளாமரான உடையில் கலந்து கொண்டிருக்கிறார். அவரது லேட்டஸ்ட் விருதுவிழா புகைப்படம் இதோ,