பிக் பாஸ்
பிக் பாஸ் 8ல் ஐந்தாவது நாளான இன்று வீட்டிற்குள் ரவிந்தருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. நேற்று ஆண்கள் அணியினர் இணைந்து prank ஒன்றை செய்தனர்.
இதனால் பெண்கள் அணியில் இருந்த அனைவரும் கடும் கோபத்தில் இருந்தனர். பெண்கள் அணியை ஏமாற்ற ஆண்கள் அணியினர் செய்த இந்த prank தற்போது ஆண்கள் அணியிலேயே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டால் வந்த சண்டை
ஆம், இந்த prank செய்வதற்கான காரணம் ரஞ்சித் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பதனால் தான் என ரவிந்தர் சொல்ல, என் பெயரை பயன்படுத்தி ஏன் கேம் ஆடாதீங்க என ரஞ்சித் வாக்குவாதம் செய்கிறார்.
அந்த சமயத்தில் தர்ஷா மற்றும் தர்ஷிகா இருவரும் இணைந்து ஆடியாது தான் கேம் என ரவிந்தர் சொல்ல, அதில் தர்ஷிகா இது பொய் என கூறுகிறார். அதே போல் இந்த விஷயத்தில் விஷாலுக்கும் ரவிந்தருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இப்படி விளையாட்டில் ஆரம்பித்த ஒரு விஷயம் தற்போது மற்ற போட்டியாளர்களுடன் ரவிந்தர் சண்டை போடுவது போல் மாறிவிட்டது.