ஜெயம் ரவி
ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா நடிகர்களின் லிஸ்டில் இருந்த ஒரு பிரபலம்.
மிகவும் தெளிவான கதைக்கள தேர்வு, நிறைய வெற்றிப்படங்கள், வித்தியாசமான படம் என கொடுத்து வந்த ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் Brother.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் சூப்பராக நடந்தது, அதில் வேறொரு ஜெயம் ரவியாக நடிகர் இருந்தார் என்றே கூறலாம்.
அடுத்த பிளான்
சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி பற்றிய சொந்த விஷயம் தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. அவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது பொருள்களை மீட்டுக் கொடுக்குமாறு போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளார் ஜெயம் ரவி. அண்மையில் மும்பை சென்ற அவரை விமான நிலையத்தில் Paparazzi வீடியோ எடுத்ததுடன் அவரிடன் சில கேள்விகளையும் கேட்டுள்ளனர்.