ஜி.வி-சைந்தவி
தமிழ் சினிமாவில் கடந்த 2006ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
முதல் படமே நல்ல ரீச் கொடுக்க அடுத்தடுத்து கிரீடம், பொல்லாதவன், குசேலன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், மயக்கம் என்ன, தலைவா என தொடர்ந்து படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து வந்தார்.
சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார்.
இப்போது இசையமைப்பாளராக தாண்டி நடிகராகவும் கலக்கி வருகிறார்.
விவாகரத்து
ஜி.வி.பிரகாஷ் தனது பள்ளி தோழி சைந்தவியை காதலித்து திருமணமும் செய்துகொண்டார், இவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.
ஜி.வி.பிரகாஷை பிரிந்த சைந்தவி முதல் வேலையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் பெயரை நீக்கி சைந்தவி என்று மாற்றி உள்ளார்.