Thursday, February 13, 2025
Homeசினிமாவிவாகரத்து சமீபத்தில் தான் ஆனது, கண்டிப்பாக அந்த ஒரு விஷயத்திற்காக மறுமணம் செய்வேன்... சீரியல் நடிகை...

விவாகரத்து சமீபத்தில் தான் ஆனது, கண்டிப்பாக அந்த ஒரு விஷயத்திற்காக மறுமணம் செய்வேன்… சீரியல் நடிகை ரிஹானா


நடிகை ரிஹானா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா.

இவர் கிடைக்கும் தொடர்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், ஆனால் அதில் இருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


விவாகரத்து

அண்மையில் ஒரு யூடியூப் சேனலில் தனது விவாகரத்து, மறுமணம் போன்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், என்னுடைய முதல் திருமணம் முறிந்து போனது அனைவருக்கும் தெரியும், அண்மையில் தான் எனக்கு விவாகரத்து ஆனது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

விதவையானாலும் சரி, விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும் சரி இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்களை சமுதாயம் தவறாக தான் பார்க்கிறது. கணவன் இல்லாமல் வாழும் பெண்ணுக்கு பல வகையில் பிரச்சனைகள் வரும்.

இதனால் நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன், அந்த திருமணத்தை நிச்சயம் அனைவருக்கும் சொல்லித்தான் செய்வேன் என்று கூறியுள்ளார். 

விவாகரத்து சமீபத்தில் தான் ஆனது, கண்டிப்பாக அந்த ஒரு விஷயத்திற்காக மறுமணம் செய்வேன்... சீரியல் நடிகை ரிஹானா | Serial Actress Reehana About Her Second Marriage

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments