Saturday, December 21, 2024
Homeசினிமாவிஷ்ணு விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. யார் தெரியுமா, அறிவிப்பு இதோ

விஷ்ணு விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. யார் தெரியுமா, அறிவிப்பு இதோ


விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இவர் மீண்டும் ராம் குமாருடன் கூட்டணி அமைந்துள்ளார். இது ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் First லுக் போஸ்டர் இதுவரை வெளிவரவில்லை.

புதிய படம்


இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தான் விஷ்ணு விஷால் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தான் தயாரிக்கவுள்ளார்.

விஷ்ணு விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. யார் தெரியுமா, அறிவிப்பு இதோ | Vishnu Vishal New Movie Annoucement

பாடலாசிரியர், நடிகராக வலம் வந்த அருண்ராஜா காமராஜ் கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து உதயநிதியை வைத்து நெஞ்சுக்கு நீதி எனும் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments