Saturday, December 7, 2024
Homeசினிமாவீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்ட ஷாருக்கான்.. உண்மையை உடைத்த பிரபல நடிகை!

வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்ட ஷாருக்கான்.. உண்மையை உடைத்த பிரபல நடிகை!


ஷாருக் கான்

பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் ஷாருக் கான். இவர் ஒரு நல்ல நடிகர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்று கூறலாம்.



இதுமட்டுமில்லாமல் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவர். இவர் 100க்கு மேற்பட்ட படங்களில் தோன்றி, பிலிம்பேர் விருதுகள் உட்பட ஏராளமான பாராட்டுக்களுக்கு சொந்தக்காரர் ஆவர்.

இந்நிலையில், ஷாருக்கான் குறித்து நடிகை ஜூஹி சாவ்லா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

உண்மையை கூறிய ஜூஹி சாவ்லா

அதில் ஷாருக்கான் சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் அவர் தங்குவதற்கு தனி வீடு கூட கிடையாது. அதனால் அவர் சொந்த ஊரான டெல்லியில் இருந்து தான் ஷூட்டிங் வருவார்.

அதுமட்டும் இல்லாமல் படக்குழுவினருடன் தான் தேநீர் அருந்துவது மற்றும் உணவு உண்ணுவர். அவர் எந்த தயக்கமும் இன்றி அனைவருடனும் பழகுவார்.

மேலும், அவர் என்னுடன் தான் ராஜு பன் கயா, ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடித்தார். அப்போது அவர் 2 முதல் 3 ஷிப்ட் வேலை செய்வர்.

இவ்வாறு கஷ்டப்பட்டு தனக்கென ஒரு கருப்பு ஜிப்சி கார் வைத்திருந்தார். ஆனால் சரியாக இ.எம்.ஐ கட்டவில்லை என்ற காரணத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ அந்த காரை எடுத்து சென்று விட்டனர்.

வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்ட ஷாருக்கான்.. உண்மையை உடைத்த பிரபல நடிகை! | Juhi Chawla Talk About Shah Rukh Khan

அந்த செயலால் அவர் மிகவும் மனமுடைந்து ஷூட்டிங் செட்டில் காணப்பட்டார். அதை கண்டு நான் அவரிடம் கவலைப்படாதீர்கள் ஒரு நாள் உங்களிடம் பல கார்கள் இருக்கும் என்று கூறினேன். அதை இன்னும் அவர் மறக்கவில்லை என்றும் கூறினார்.



மேலும் நான் சொன்னதை போல இன்று அவரை பாருங்கள், ஷாருகான் இன்று பல சொகுசு கார் மற்றும் மும்பையில் பங்களாவையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments