Friday, April 18, 2025
Homeசினிமாவீர தீர சூரன் படத்தின் ரிலீஸில் சிக்கல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வீர தீர சூரன் படத்தின் ரிலீஸில் சிக்கல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு


சிக்கலில் வீர தீர சூரன்

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். HR பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இன்று இப்படம் வெளிவரவிருந்த நிலையில், படத்தை எதிர்த்து B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நேற்று (மார்ச் 26) உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு

மேலும் இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீர தீர சூரன் ரிலீஸ் விவகாரத்தில் உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீர தீர சூரன் படத்தின் ரிலீஸில் சிக்கல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Delhi High Court Judgement On Veera Dheera Sooran

மேலும், படத்தின் OTT உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், தயாரிப்பு நிறுவனம் மீது B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments