Sunday, December 8, 2024
Homeசினிமாவெங்கட் பிரபு படத்தில் நடிக்க மறுத்துள்ள பிரபல பாடகி.... ஏன் தெரியுமா?

வெங்கட் பிரபு படத்தில் நடிக்க மறுத்துள்ள பிரபல பாடகி…. ஏன் தெரியுமா?


வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் கூலான இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. எப்போதும் ஜாலியாக எந்த ஒரு நிகழ்ச்சி வந்தாலும் கலகலப்பாக நிறைய விஷயங்கள் பேசுவார். 

அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் கோட், The Greatest Of All Time. விஜய்யின் 68வது படமான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 

ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் படம் ரூ. 350 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

பிரபல பாடகி

தமிழ் சின்னத்திரையில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று விஜய்யின் கோட் படத்தை புரொமோட் செய்தார். அப்போது ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு வந்த வெங்கட் பிரபு சைந்தவி குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், சைந்தவியை எனது படத்தில் நாயகியாக நடிக்க கேட்டேன் அவர் மறுத்துவிட்டார் என கூறியுள்ளார். அதாவது வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு சைந்தவிக்கு வந்துள்ளது. 

ஆனால் அவர் அய்யோ எனக்கு நடிக்க தெரியாது என்னை விட்டுவிடுங்கள் என கூறியிருக்கிறார். 

வெங்கட் பிரபு படத்தில் நடிக்க மறுத்துள்ள பிரபல பாடகி.... ஏன் தெரியுமா? | Saindhavi Rejects Venkat Prabhu Film Offer

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments