சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து, அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் நடித்து முடித்த கையோடு சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்டாக சிவகார்த்திகேயன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.
கோட் காரணமா
இப்படம் முடிந்த பின் சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25-வது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
சூழல் இப்படி இருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தள்ளிப்போட்ட காரணம் GOAT படத்தின் ரிசல்டாக இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.