யாஷ்
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எப். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2 வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.
கே.ஜி.எப் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் டாக்சிக். இப்படத்தை பிரபல இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் யாஷ் உடன் இணைந்து நடிகை நயன்தாரா நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் யாஷின் சகோதரியாக தான் நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
யாஷ் புதிய லுக்
இந்த நிலையில், கே.ஜி.எப் படத்தில் வருவது போல் இல்லாமல் டாக்சிக் படத்திற்காக தனது கெட்டப்பை டோட்டலாக மாற்றியுள்ளார் நடிகர் யாஷ். அம்பானி வீட்டு திருமணத்தில் அவர் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் அவர் தனது லுக்கை மாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.
[BTZS2I ]
இதோ அந்த வீடியோ..
Today’s ❤️from #AnantRadhikaWedding#ToxicTheMovie New Hairstyle ❤️🔥@TheNameIsYash #YashBoss
pic.twitter.com/Kcsa5Phbbg— MNV Gowda (@MNVGowda) July 12, 2024