தங்கலான்
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை கண்டிருக்கும் திரைப்படம் தங்கலான்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி இருந்தது.
படத்தின் புரொமோஷனை படக்குழு படு சூப்பராக செய்ய படமும் அட்டகாசமான வரவேற்பு பெற்றுள்ளது.
படத்தின் கதை, இயக்கம் தாண்டி நடிகர்களின் கடின உழைப்பிற்கு ரசிகர்கள் அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.
சம்பளம்
கதாபாத்திரத்திற்கு ஏற்றவாரு படக்குழுவினர் அனைவரும் நல்ல சம்பளம் பெற்றுள்ளனர். தங்கலான் படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விவரங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
தற்போது இந்த படத்திற்காக கதைக்கு ஏற்றவாரு இசையமைத்து ஸ்கோர் செய்திருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்காக ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.