தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் ஜொலித்து வருகிறார்.
தனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
இவர் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என தனுஷ் நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நான்கு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்படம் என்பதை நாம் அறிவோம்.
ஆடுகளம்
இதில் முதல் முறையாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருக்கும் தேசிய விருது கிடைத்த திரைப்படம் என்றால் அது ஆடுகளம் தான். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருந்தார். இதுவே அவருடைய அறிமுக தமிழ் திரைப்படமாகும். ஆனால், நடிகை டாப்ஸிக்கு முன்பு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வானவர் நடிகை திரிஷா தான்.
முதலில் நடிக்கவிருந்த நடிகை
ஆம், நடிகை திரிஷா தான் இப்படத்தில் கதாநாயகியாக சில நாட்கள் நடித்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், சில காரணங்களால் திரிஷா படத்திலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக டாப்ஸி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆடுகளம் படத்தில் தனுஷ் – திரிஷா இணைந்து நடிக்கமுடியாமல் போன நிலையில், அரசியல் கதைக்களத்தில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் தனுஷ் – திரிஷா ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.