தனுஷ் – வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் செம மாஸ் கம்போ தனுஷ் – வெற்றிமாறன். இவர்கள் இருவரும் முதன் முதலில் இணைந்த திரைப்படம் பொல்லாதவன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என் தொடர்ந்து இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக வடசென்னை 2 படத்தில் இவர்கள் இருவரும் எப்போது இணைய போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில், பழைய பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கைவிடப்பட்ட திரைப்படம்
இதில் “வேங்கை சாமி என்கிற தலைப்பில் தனுஷை வைத்து படம் இயக்கவிருந்தேன். அது வேறொருடைய கதை ஆகும்” என கூறியுள்ளார். ஆனால், அந்த படம் அதன்பின் நடக்கவில்லை. இதே போல் தேசிய நெடுஞ்சாலை எனும் திரைப்படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து, அதன்பின் கைவிடப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை படத்திற்காக தனுஷை வைத்து போட்டோஷூட் கூட நடந்தது. மேலும்அதன்பின் அந்த கதை தான் சித்தார்த் நடித்து உதயம் NH4 எனும் தலைப்பில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.