ஷ்ரத்தா ஸ்ரீநாத்
காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்கியவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் சினிமாவில் பயணித்து வரும் இவர் குறுகில காலத்திலேயே அதிக அளவிலான படங்களில் நடித்தார்.
முதல் படத்திற்கு பிறகு இவன் தந்திரன், விக்ரம் வேதா போன்று தமிழில் தொடர்ந்து நடித்து வந்தவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார்.
தற்போது ஷ்ரத்தா கலியுகம், தெலுங்கில் மெக்கானிக் ராக்கி மற்றும் ஹிந்தியில் லெட்டர் டு மிஸ்டர் கண்ணா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தாய்லாந்து
படங்களில் பிஸியாக நடித்துவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் கிளாமரான உடையில் நீச்சல் குள ஆடைகள் எல்லாம் அணிந்து புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.